ஆபத்தான நிலையில் மின்மாற்றி

Update: 2023-10-01 11:42 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கொழையூர் கிராமத்தில் வள்ளலார் தெருவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் பின்புறம் மி்ன்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றியை தாங்கிபிடித்துள்ள மின்கம்பங்கள் சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக மின்கம்பத்தின் அடிப்பகுதியில் உள்ள மண் சரிந்து வருகிறது. இதனால் மின்மாற்றி ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்மாற்றியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.



மேலும் செய்திகள்