அரக்கோணம் தாலுகா அம்பரீஷ்புரம் கிராமத்தில் ஜடேரி பகுதியில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் புயல், மழைக் காலங்களில் அசம்பவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இப்பகுதியில் மின் கம்பிகள் தாழ்வாக செல்வதால் பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்ல இயலவில்லை. எனவே சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்கம்பியை சற்று மேலே உயர்த்தி அமைக்க வேண்டும்.
-ஜானகிராமன், அம்பரீஷ்புரம்.