ராணிப்பேட்டை மாவட்டம் தெங்கால் அடுத்த நவ்லாக் பண்ணை அருகில் பாலாறு குறுக்கே மேம்பாலம் கட்டப்பட்டது. அந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால், அந்த மேம்பாலத்தில் மின் விளக்கு வசதி இல்லை. இரவில் சமூக விரோத செயல்களும், விபத்துகளும் நடக்கின்றன. மேம்பாலத்தில் மின் விளக்கு வசதியை ஏற்படுத்தி கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமுதா, ராணிப்பேட்டை.