சாய்ந்த கம்பம்

Update: 2023-10-29 16:57 GMT

வேலூரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எதிரே அரசினர் குடியிருப்பு உள்ளது. அங்குள்ள ஒரு டெலிபோன் கம்பம் சாலையோர இரும்புத்தடுப்பின் மீது சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மீது விழுந்தால் அசம்பாவிதம் ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சரிந்துள்ள டெலிபோன் கம்பத்தை சரி செய்ய வேண்டும்.

-சாமிநாதன், வேலூர்.

மேலும் செய்திகள்