செங்கத்தில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மெயின் ரோடு, போளூர் ரோடு வரை சாலையின் நடுவே தடுப்புச் சுவர்களையொட்டி உயர் கோபுர மின்விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டன. இந்த உயர் கோபுர மின்விளக்கு கம்பங்கள் மீது சரக்கு லாரிகள் உரசி செல்வதால் சாய்வாக கீழே விழும் நிலையில் உள்ளது. பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, பழைய பஸ் நிலையம் அருகில் உயர் கோபுர மின் விளக்கு கம்பங்கள் சாய்வாக உள்ளன. அதை சரி செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவச்சந்திரன், செங்கம்.