ஆரணி நகரின் மையத்தில் கோட்டை மைதானம் உள்ளது. இது, விளையாட்டுத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சமீபத்தில் பெஞ்ஜல் புயலால் பலத்த மழைப் பெய்தபோது சாலையோரம் இருந்த மரம் சுற்றுச்சுவர் மீது விழுந்து, நடைபாதை பகுதியில் இருந்த தடுப்புக் கம்பிகள் அனைத்தும் சாய்ந்து பல நாட்கள் ஆகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நடைப்பயிற்சி மேற்கொள்ளும் மாற்றுத்திறனாளிகள், முதியோர் சிரமப்படுகின்றனர். அதை, விளையாட்டுத்துறை, ஆரணி நகராட்சி நிர்வாகம் உடனடியாக சீர் செய்ய வேண்டும்.
-ரமணி, ஆரணி.