மின் கம்பம் சேதம்

Update: 2026-06-14 18:53 GMT

ஆரணி தாலுகா அக்ராபாளையம் கிராமம் மந்தைவெளி திடல் பின்பகுதியில் அமைந்துள்ள தெருவில் மின் கம்பத்தின் உச்சியில் சேதம் ஏற்பட்டு சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கீழே விழுவதால் உள்ளே இருக்கும் இரும்புக்கம்பி கள் வெளியே தெரிகிறது. அந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் உடைந்து விடும் அபாயம் உள்ளது. அதில் உள்ள மின்கம்பிகள் மிகத் தாழ்வாக செல்வதால் வீட்டில் முதல் தளத்தில் கைக்கு எட்டும் தூரத்தில் உள்ளது. எந்த நேரத்திலும் அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு உள்ளதால் மின் கம்பத்தை புதிதாக அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கண்ணதாசன், அக்ராபாளையம். 

மேலும் செய்திகள்