வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டுச்சந்தை நடக்கிறது. மாலை நேரத்தில் காய்கறிகள், மளிகைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. மாலையில் வாரச்சந்தையில் மின்விளக்குகள் இல்லை. வியாபாரிகள் ‘டார்ச் லைட்’ வெளிச்சத்தில் வியாபாரம் செய்கிறார்கள். சந்தையில் மின் விளக்கு வசதி செய்து தருவார்களா?
-பிச்சைமுத்து, பொய்கை.