ஆபத்தான மின் கம்பம்
திருப்பூர் தாராபுரம் மெயின் ேராடு உள்ளது தில்லை நகர். இங்கு ஏராளமான குடியிருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். , மேலும் பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. மெயின் ரோட்டில் இருந்து தில்லை நகருக்கு செல்லும் சாலையின் முன்பகுதியில் உள்ள மின் கம்பம் மிகவும் பழுதடைந்து மேலே உள்ள சிமெண்டு பூச்சுகள் உடைந்து உள்ளே உள்ள இரும்பு கம்பிகள் வெளியில் தெரிகின்றன. இந்த மின் கம்பத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தின் அருகில் பொதுமக்கள் நடந்தும், சிலர் இருசக்கர வாகனங்களிலும் செல்கிறார்கள். அசம்பாவிதம் நிகழும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த மின் கம்பத்தை அகற்றிவிட்டு மாற்றுமின் கம்பம் அமைக்க வேண்டும் என்பதும் அனைத்து தரப்பினரின் வேண்டுகோளாகும்.
சுரேஷ், திருப்பூர், 98417 49158