சாலையின் நடுவே மின்கம்பம்

Update: 2022-08-12 14:33 GMT

திருப்பத்தூர் புதிய கலெக்டர் அலுவலகம் பின்புறம் லண்டன் மிஷன் ரோட்டில் 2 பள்ளிக்கூடம் உள்ளது. இந்தச் சாலையின் நடுவே 3-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உள்ளன. சாலையின் நடுவே மின்கம்பங்கள் இருப்பதால் அடிக்கடி விபத்துகள ஏற்படும் நிைல உள்ளது. கலெக்டர் அலுவலகத்துக்கு பின்புறமாக செல்பவர் சாலையின் நடுவே மின்கம்பம் இருப்பது தெரியாமல் கம்பத்தில் மோதி பலர் விபத்தில் காயம் அடைந்துள்ளனா். மின்கம்பங்கங்களால் சாலையில் ஒரே நேரத்தில் 2 வாகனங்கள் மாறி செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே சாலையின் நடுவே உள்ள மின்கம்பங்களை மாற்றி ஓரமாக அமைக்க வேண்டும்.

துரை, திருப்பத்தூர்

மேலும் செய்திகள்