ஜோலார்பேட்டை பாபு நகர் அருகே கோவிந்தசாமி தெருவில் ஒரு மின்கம்பம் சாலையின் நடுவே உள்ளது. அந்த வழியாக நான்கு சக்கர வாகனங்கள் வந்து திரும்ப முடியாமல் சிரமமாக உள்ளது. ஒரு சில நேரங்களில் இரு சக்கர வாகனங்கள் செல்லும்போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இது குறித்து மின் வாரியத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தெருவின் நடுவே உள்ள மின் கம்பத்தை சற்று ஓரமாக மாற்றி அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
-அ.லிங்கேஷ், கூட்ஸ்செட் ரோடு, இடையம்பட்டி.