திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள மேரி இமாகுலேட் பள்ளி எதிரிலும், இரட்டைமலை சீனிவாசன்பேட்டை ஆகிய 2 இடங்களில் நடு ரோட்டில் மின்கம்பம் உள்ளது. இதனால் அந்த வழியாக சாலையில் செல்பவர்கள் அடிக்கடி அந்த மின்கம்பத்தில் மோதி விடுகின்றனர். கார் போன்ற வாகனங்கள் அடிக்கடி மின்கம்பத்தில் மோதி விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே நடுரோட்டில் உள்ள மின்கம்பத்தை பிடுங்கி ஓரமாக அமைக்க மின்வாரியத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மோகன், திருப்பத்தூர்.