ஆபத்தான நிலையில் மின்கம்பம்

Update: 2025-09-21 16:31 GMT

வேலூர் சத்துவாச்சாரி பகுதி 3-ல் ஸ்ரீராம் நகர் விரிவு பகுதி, காமராஜர் தெரு முனைகள் சந்திப்பில் உள்ள மின்கம்பத்தில் இருந்து அனைத்துத் தெருக்களில் உள்ள வீடுகளுக்கும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மின் கம்பம் உறுதியான பிடிமான கம்பி இல்லாமல், ஒரு பக்கமாக வளைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. வாகனங்கள் திரும்பும் போது அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மக்கள் நலன் கருதி மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-துரைசாமி, வேலூர்.

மேலும் செய்திகள்