திருப்பத்தூரில் உள்ள மாவட்ட அரசு பொது மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கிறார்கள். திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் வழியாக மாவட்ட வன அலுவலகத்தைக் கடந்து நீதிபதிகள் வீடுகள் உள்ளன. அந்த வழியில் உள்ள சாலையில் மின்விளக்குகள் இல்லை. இரவில் இருட்டாக உள்ளது. ஆகையால் உடனடியாக அந்தப் பகுதிகளில் நகராட்சி சார்பில் தெரு விளக்குகள் அமைத்துத் தர வேண்டும்.
-ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.