மின் விளக்குகளை பொருத்த ேவண்டும்

Update: 2022-07-10 14:28 GMT



சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு தினமும் ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் ஆகிய மாவட்ட எல்லைகளில் வசிக்கும் மக்கள், நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். அங்கு உயர் கோபுர மின்விளக்கு அமைத்தனர். அதில் 6 விளக்குகள் பொருத்தப்பட்டன. அதில் 3 பழுதாகி விட்டன. அதைக் கழற்றி விட்டதால், இரவில் ெவளிச்சம் குறைவாக உள்ளது. கழற்றிய மின் விளக்குகளை மீண்டும் கோபுரத்தில் பொருத்த ேவண்டும்.

-பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும் செய்திகள்