காவேரிப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாணாவரம் ஊராட்சியில் நெடுஞ்சாலையோரம் உள்ள பஜார் பகுதி, காவேரிப்பாக்கம் சாலை, பழைய காலனி போன்ற பகுதிகளில் உள்ள தெரு விளக்குகள் இரவு, பகல் என தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கிறது. இதனால் மின்சாரம் வீணாகிறது. எனவே பகல் நேரத்தில் தெரு மின் விளக்குகள் எரிவதை தடுக்க, ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கனகராஜ், காவேரிப்பாக்கம்.