வாரச்சந்தைக்கு மின் விளக்கு வசதி

Update: 2022-11-09 12:05 GMT

சோளிங்கரில் வாரந்தோறும் புதன் கிழமை அன்று வாரச்சந்தை நடக்கிறது. அங்கு ஏராளமான வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்கிறார்கள். தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க ஏராளமான பொதுமக்கள் சந்தைக்கு வருகின்றனர். வாரச்சந்தையில் மின் விளக்கு வசதி இல்லை. மேலும் கூடுதலாக மேற்கூரைகளும் இல்லை. மின் விளக்கு மற்றும் மேற்கூரை வசதி செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும். நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-பகத்சிங், சோளிங்கர். 

மேலும் செய்திகள்