திருப்பத்தூர் மாவட்ட புதிய கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் மின்விளக்குகள் ஏதும் இல்லாமல் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் இரவில் பணி முடித்து வரும் ஊழியர்கள் பெரும் அவதிப்படுகின்றனர். மின்விளக்கு வசதிகள் இருந்தும் அதனை பயன்படுத்தாமல் இருப்பதால் சாலையில் செல்பவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் இருளில் மூழ்கி கிடப்பதை பார்த்து வருத்தத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே இரவு நேரங்களில் நுழைவு வாயில் மின்விளக்குகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வெண்பிரணவ், திருப்பத்தூர்.