எரியாத உயர்மின் கோபுர விளக்கு
பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தினமும் பல்லாயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றன. பல்லடம் பஸ் நிலையம் அருகே கொசவம்பாளையம் நால்ரோடு பகுதியில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. அதில் இருந்த 6 விளக்குகளும் பழுதடைந்து, தற்போது எரிவதில்லை. இதனால் அந்த பகுதியில் வெளிச்சம் குறைவாக உள்ளதால், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்துகளில் சிக்குகின்றனர். இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உயர் மின் கோபுர விளக்கை சரி செய்ய வேண்டும் என்பதுஅனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அர்ஜூன், பல்லடம்.