திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது தலையாம்பள்ளம் கிராமம். அங்குள்ள வடக்குத் தெரு பகுதியில் தெருவின் மையப் பகுதியில் மின் கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின் கம்பம் விவசாய நிலங்களில் இருந்து வீட்டுக்கு தானியங்களை கொண்டு செல்ல, சாமி வீதிஉலா நேரத்தில், சுப விஷேச நாட்களில் வாகனங்கள் வந்து செல்ல இடையூறாக உள்ளது. எனவே மின்வாரியத்துறையினர் தெருவின் மையப் பகுதியில் உள்ள மின்கம்பத்தை மாற்றி வைக்க வேண்டும்.
-சிவக்குமார், தலையாம்பள்ளம்.