திருப்பத்தூர் நகராட்சி சார்பில் அனைத்துத் தெருக்களிலும் தெருவிளக்குகள் பராமரிப்பு தனியாருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. கச்சேரி தெரு, செட்டி தெரு பகுதிகளில் தெருவிளக்குகள் தொடர்ந்து 2 நாட்களாக பகலிலும் எரிந்து கொண்டிருக்கிறது. இதனால் நகராட்சிக்கு மின்சார செலவு அதிகமாகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பகலில் எரியும் மின் விளக்குகளை அணைக்க வேண்டும். மின்சாரம் வீணாவதை தடுக்க வேண்டும்.
-டி.என்.டி.கே. சுபாஷ், நகராட்சி கவுன்சிலர், திருப்பத்தூர்.