அறுந்து தொங்கும் ஸ்டே கம்பி

Update: 2023-09-24 13:00 GMT

ஜோலார்பேட்டையை அடுத்த அம்மையப்பன்நகர் பூக்காரன் வட்டத்தில் ஒரு மின்கம்பத்தின் மெயின் ஸ்டே கம்பி அறுந்து தொங்குகிறது. அறுந்து தொங்கும் ஸ்டே கம்பிகளால், அந்த வழியாக செல்வோருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதுகுறித்து மின்வாரியத்துறை அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஸ்டே கம்பியை கட்டுவார்களா?

-ஆ.கலாஆஞ்சி, ஒன்றிய கவுன்சிலர், ஜோலார்பேட்டை.

மேலும் செய்திகள்