செய்யாறு டவுன் கிரிதரன் பேட்டையில் நகராட்சி உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அதில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி நுழைவு வாயில் முன்பு மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. டிரான்ஸ்பார்மரில் இருந்து உயர் மின்னழுத்த கம்பிகள் வகுப்பறை ஜன்னல் ஓரமே உள்ளன. இதனால் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே டிரான்ஸ்பார்மரை அகற்றி ஒதுக்குப்புறமாக வைக்க மின்வாரியத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரகாஷ்ராஜ், செய்யாறு.