ஆபத்தான மின் இணைப்பு பெட்டி

Update: 2022-08-16 10:17 GMT



திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே உயர் கோபுர மின் விளக்கு கம்பம் ஒன்று அமைந்துள்ளது. இதன் அருகே உள்ள மின் இணைப்பு பெட்டி திறந்த நிலையில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் காணப்படுகிறது. அந்த இடத்தில்தான் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெறுகிறது. அப்போது மின் இணைப்பு பெட்டியின் அருகில் ஏராளமானவர்கள் அமருகின்றனர். எனவே அங்கு விபரீதம் ஏற்படும் முன் அதிகாரிகள் இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்