ஆபத்தான மின் பெட்டி

Update: 2022-08-19 10:10 GMT

வேலூர் சத்துவாச்சாரி கோர்ட்டு அருகே உள்ள தபால் நிலையம் முன்பு டிரான்ஸ்பார்மர் உள்ளது. அந்த டிரான்ஸ்பார்மரில் உள்ள மின் வினியோகப் பெட்டி உடைப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள மின் வினியோகப் பெட்டியை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாயவன் ேவலூா்

மேலும் செய்திகள்