அரக்கோணம்-வடமாம்பாக்கம் செல்லும் ரோட்டில் திருத்தணி ரோடு மேம்பாலம் அருகே மின் கம்பம் சிமெண்டு பூச்சு பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் வகையில் ஆபத்தான நிலையில் உள்ளது. அதே போல் நாகாலம்மன் நகர் பகுதியில் திருத்தணி நெடுஞ்சாலையில் உள்ள பாலாஜிநகர் முகப்பு பகுதியில் ஒரு மின் கம்பம் மழை, காற்று வீசினால் திடீரென கீழே சாய்ந்து விழும் அபாயகரமான நிலையில் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன் மின் கம்பங்களை மாற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-லோகேஷ், அரக்கோணம்.