ஆரணியை அடுத்த குன்னத்தூர் கிராமத்தில் ஆரணி-வேலூர் நெடுஞ்சாலையில் ஒரு பெட்ரோல் பங்க் எதிரே ஒரு மின்கம்பம் உள்ளது. அந்தக் கம்பத்தின் நடுவில் சேதம் அடைந்து, ஆபத்தான நிலையில் உள்ளது. சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. மழைக் காலமாக உள்ளதால், சூறைக்காற்று அடிக்கும்போது மின் கம்பம் கீழே விழலாம். அசம்பாவிதம் நடக்கும் முன் சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுத்து, மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
-விக்னேஷ், ஆரணி.