ஆபத்தான மின்கம்பம்

Update: 2024-01-14 17:22 GMT

ஆற்காடு பஸ் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்தில் உள்ள ஒரு மின் கம்பம் சேதம் அடைந்துள்ளது. கம்பத்தில் உள்ள சிமெண்டு பூச்சு பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. ஆபத்தான நிலையில் இருக்கும் மின்கம்பத்தை மாற்றி புதிய கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ராமகிருஷ்ணன், திமிரி.

மேலும் செய்திகள்