வாணாபுரம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் பெருந்துறைப்பட்டு துணை மின் நிலையங்களில் இருந்து அப்பகுதி சேர்ந்த விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கு மின்சாரம் வினிேயாகம் ெசய்யப்பட்டு வருகிறது. அகரம்பள்ளிப்பட்டு உள்ளிட்ட பகுதியில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. விவசாயிகள் கரும்பு அறுவடை செய்ய முடியாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். கம்பிகள்ஒன்றுடன் ஒன்று உராய்ந்தால் தீப்ெபாறி ஏற்பட்டு தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாாியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சற்று உயா்த்தி கட்ட ேவண்டும்.
சுப்பிரமணியம், ெபந்துைறப்பட்டு