திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி எதிரில் திருநாத முதலியார் தெருவில் ஒரு மின்கம்பம் சேதமடைந்துள்ளது. அந்தக் கம்பத்தில் உயர் மின்னழுத்த கம்பிகள் செல்வதால், காற்று வீசும்போது அசம்பாவிதம் நடக்க வாய்ப்புள்ளது. எனவே மின்கம்பத்தை மாற்றி அமைக்க மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்தானம், திருப்பத்தூர்.