ஜோலார்பேட்டை ஒன்றியம் தாமலேரிமுத்தூர் ஊராட்சியில் உள்ள அருந்ததியர் காலனி, பில்லிவட்டம், காந்திநகர், ஜெ.ஜெ. நகர், சாலை நகர் உள்ளிட்ட 16 இடங்களில் மின் கம்பங்கள் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன. இது குறித்து பலமுறை மின்வாரிய அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்கள் ஊராட்சி பகுதியில் உள்ள பழுதடைந்த மின் கம்பங்கள் சாய்ந்து ஏதும் அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்பு பழுதடைந்த மின் கம்பங்களை மாற்ற ஏற்பாடு செய்ய வேண்டும்.
-சுதா இளங்கோ, ஊராட்சி மன்ற தலைவர், தாமலேரிமுத்தூர்.