மின்சார பெட்டிக்கு மூடி போட வேண்டும்

Update: 2023-02-08 16:53 GMT

குடியாத்தம்-காட்பாடி தேசிய நெடுஞ்சாலை ஓரம் குடியாத்தம் தலைமை தபால் நிலையம் உள்ளது. அதன் அருகில் ஒரு மின்கம்பத்தில் பீயூஸ் கேரியர் பெட்டி துருபிடித்துள்ளது. அதற்கு மூடி இல்லாமல் திறந்த வெளியில் உள்ளது. ஆபத்து ஏற்படும் முன் மின்சார பெட்டிக்கு மூடி போட்டு சீரமைக்க வேண்டும்.

-முருகன், குடியாத்தம்.

மேலும் செய்திகள்