திருப்பத்தூர் இரட்டைமலை சீனிவாசன் தெருவில் உள்ள மின்கம்பத்தில் தென்னை ஓலை தொங்கிய நிலையில் உள்ளது. இதனால் காற்று வீசும் நேரத்தில் மின்கம்பிகளில் ஓலை உரசி மின்தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மின்கம்பத்தில் உள்ள தென்னை ஓலையை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தினேஷ், திருப்பத்தூர்.