ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் உள்ள பழைய மேம்பாலம் மற்றும் செய்யாறு சாலை சந்திப்பில் உயர் கோபுர மின் விளக்கு உள்ளது. இந்த உயர்கோபுர மின் விளக்கு ஆற்காடு வரும் சாலை, செய்யாறு செல்லும் சாலை, ராணிப்பேட்டை செல்லும் சாலை, வேலூர் செல்லும் சாலை ஆகிய 4 வழிகளில் அமைந்திருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு இரவில் விபத்துகள் ஏற்படாமல் செல்ல வசதியாக இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக உயர் கோபுர மின்விளக்கு எரியவில்லை. இதனால் அந்தப் பகுதியில் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்வார்களா?
செல்வம், ஆற்காடு