பழுதான மின் கம்பம் மாற்றப்படுமா?

Update: 2023-04-05 17:20 GMT

அரக்கோணம் சுவால்பேட்டை திருத்தணி பிரதான சாலையில் டிரான்ஸ்பார்மர் அருகே உள்ள மின் கம்பத்தின் சிமெண்டு பூச்சு பெயர்ந்து கம்பம் முழுவதும் விரிசல் ஏற்பட்டுள்ளது. உள்ளே உள்ள கம்பிகள் வெளியே தெரிகிறது. இது குறித்து மின் வாரிய அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் அலட்சியமாக உள்ளனர். அசம்பாவிதம் ஏற்படும் முன் மின் கம்பம் மாற்றப்படுமா?

-சுரேந்தர், அரக்கோணம்.

மேலும் செய்திகள்