குண்டும் குழியுமான சாலை

Update: 2022-07-13 17:16 GMT


திருப்பத்தூர், சேலம் மற்றும் கிருஷ்ணகிரி, தர்மபுரி கூட்ரோடு அருகே புதிதாக போடப்பட்ட தார் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதன் அருகே உள்ள பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியே வந்து சாலை முழுவதும் குண்டும் குழியுமான இடத்தில் தேங்கியுள்ளது. அதேபோன்று கிருஷ்ணகிரி செல்லும் தார் சாலைமுழுவதும் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். உடனடியாக சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜ்குமார், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்