எரியாத உயர்கோபுர மின்விளக்கு

Update: 2022-07-13 17:11 GMT


வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பஸ்நிலையத்தில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள மின்விளக்குகள் கடந்தசில நாட்களாக எரிவதில்லை. தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் நூற்றுக்கணக்கானவர்கள் பஸ்நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். இரவு நேரத்தில் மின்விளக்கு எரியாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உயர்கோபுர மின்விளக்குகளை எரியவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மணிமாறன், பேரணாம்பட்டு.

மேலும் செய்திகள்