வேலூர் கோட்டைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள அருங்காட்சியகம் அருகே உள்ள மின்கம்பத்தின் கம்பிகளில் கொடிகள் படர்ந்துள்ளது. மேலும் மின்கம்பத்தின் அருகே புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. மின்கம்பிகளில் படர்ந்துள்ள கொடியால் மின்வெட்டு, மின்கசிவு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அந்தக் கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மயிலை.பாலன், வேலூர்.