உயர் கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும்

Update: 2024-09-29 20:07 GMT

வேலூர் சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ. சாலையில் தெற்கு அவென்யூ சாலை சந்திப்பில் உயர் கோபுர மின்விளக்கு இருந்தது. அது, பழுது ஏற்பட்டதால் பழுது நீக்கும் பணிக்காக அகற்றப்பட்டது. ஆனால் இன்னும் அப்பகுதியில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்படவில்லை. இதனால் இரவில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மீண்டும் அதே இடத்தில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமதாஸ், வேலூர்.

மேலும் செய்திகள்