கலவை பேரூராட்சி 8-வது வார்டில் கிணற்றுத் தெருவில் அரசு மருத்துவமனை பின்பக்கம் டிரான்ஸ்பார்மர் உள்ளது. அதில் கொடிகள் படர்ந்துள்ளது. இதுபற்றி கலவை மின் வாரிய அலுவலகத்துக்கு பலமுறை பொதுமக்கள் தகவல் கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. டிரான்ஸ்பார்மர் மீது படர்ந்துள்ள கொடி வழியாக மின்கசிவு ஏற்பட்டு ஆபத்து நடக்க வாய்ப்புள்ளது. கொடியால் அடிக்கடி பியூஸ் போய் விடுகிறது. டிரான்ஸ்பார்மர் மீது படர்ந்துள்ள கொடியை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும்.
-சதுல்லா, சமூக ஆர்வலர், கலவை.