மயிலாடுதுறை மாவட்டம் 12-வது வார்டில் கீழ ஒத்தசரகு தெருவில் 10 -க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த தெருவில் மின் விளக்கு வசதி இல்லாததால் கும்மிருட்டாக உள்ளது. இதனால் விஷ பூச்சிகள் அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின் விளக்கு வசதி செய்து தர வேண்டும்.
பொதுமக்கள் மயிலாடுதுறை.