நடவடிக்கை தேவை

Update: 2022-08-10 13:58 GMT

கன்னியாகுமரி-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் கரியமாணிக்கபுரத்தை அருகில் யானைப்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அருகில் நாகர்கோவில் நகராட்சியாக இருந்தபோது வரவேற்பு பலகை வைக்கப்பட்டது. தற்போது, நாகர்கோவில் மாநகராட்சியாக மாறிய பின்னும் பழைய வரவேற்பு பலகை அகற்றப்படாமல் காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழைய பலகை அகற்றி விட்டு புதிய வரவேற்பு பலகை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பி.உலகப்பன், கரியமாணிக்கபுரம்.

மேலும் செய்திகள்