அறுந்து விழும் மின்கம்பிகள்

Update: 2022-08-10 11:29 GMT

சிதம்பரம் மின் நிலையத்தில் இருந்து அண்ணாமலை நகர் சிவபுரி துணை மின் நிலையத்திற்கு செல்லும் மின்கம்பிகள் அமைத்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனால் அடிக்கடி மின்கம்பிகள் அறுந்து விழுந்து விடுகிறது. சிவபுரி துணை மின் நிலையத்திலிருந்து  மின் வினியோகம் செய்யப்படும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி, மற்றும் மின் நிலையத்தை சுற்றி இருக்கும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

இதில் குறிப்பாக  ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருக்கும் உள்நோயாளிகள், மற்றும் பிற பிரிவுகளில் சிகிச்சை பெறுபவா்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே இந்த பகுதியில் பழுதடைந்து இருக்கும்  மின் கம்பிகளை மாற்றி தந்து, தடையில்லா மின்சாரம் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.

மேலும் செய்திகள்