தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2022-08-01 13:23 GMT

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே ஆலங்குடி மெயின் ரோட்டில் உள்ள வயல் வெளிப்பகுதியில் மின்சார கம்பிகள் தாழ்வாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தாழ்வாக சென்ற மின் கம்பிகளை சரிசெய்தனர். இதற்கு இப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்