திருப்பத்தூரை அடுத்த பொம்மிகுப்பம் ஊராட்சி 5-வது வார்டுக்கு உட்பட்ட பழத்தோட்டம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்குள்ள ஒரு மின் கம்பம் எந்த நேரத்திலும் உடைந்து கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. அந்த வழியாக செல்லும் கிராம மக்கள் உயிர் பயத்தில் பயணம் செய்கிறார்கள். அந்த மின் கம்பத்தை மாற்றி அமைக்க மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராதாகிருஷ்ணன், பொம்மிகுப்பம்.