ஒடுகத்தூர் அருகில் உள்ள கரடிக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பிச்சாநத்தம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பஸ் நிறுத்தம் வழியாக கிராமம் வரை சாலையோரத்தில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த மின்கம்பங்கள் அமைத்து பல ஆண்டுகள் ஆனதால் தற்போது மின் கம்பத்தில் உள்ள சிமெண்டு பூச்சிகள் உதிர்ந்து இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகின்றன. ஆபத்தான நிலையில் இருக்கும் மின்கம்பத்தை மாற்றி அமைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கவுதம், கரடிக்குடி.