ஈரோடு நாடார்மேடு விநாயகர் கோவில் வீதியில் உள்ளது புதுக்கள்ளிவலசு குடியிருப்பு பகுதி. இங்கு ஒரு வீட்டையொட்டி காணப்படும் மின்கம்பத்தின் அடிப்பகுதியில் சிமெண்டு காரை பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் எப்போது விழுமோ? என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். ஆபத்தான நிலையில் உள்ள இந்த மின்கம்பத்தை உடனே மாற்றி அமைக்க மின்சார துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?