ஈரோடு சோலார் செந்தூர் கார்டன் ரணியன் 1-வது வீதியில் மின்கம்பம் உள்ளது. இதிலுள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் கீழே சாய்ந்து விட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக பேராபத்து ஏற்படலாம். அதற்கு முன்பு மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.