ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-07-13 17:39 GMT

புதுக்கோட்டை மேல ராஜவீதியில் பழனியப்பா முக்கம் என்பது புதுக்கோட்டையின் மையப்பகுதியாகும். இங்கு திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வரும் பஸ்கள் நின்று செல்லும் பஸ் நிறுத்தம் உள்ளது. மேலும் இங்கு கடைவீதி மற்றும் திரையரங்கு உள்ளதால் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இந்த பகுதியில் உள்ள மின் கம்பத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகனம் மோதியதால் மின்கம்பம் சேதமடைந்தது. இதனால் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் உடனடியாக இந்த மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்

மேலும் செய்திகள்