சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ரிலைன்ஸ் கார்டன் பகுதியில் உள்ள மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் குடியிருப்புவாசிகள் அச்சம் அடைகின்றனர். தற்போது மழை காலம் என்பதால் இவ்வாறு தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் மின்விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.